விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Sunday, January 9, 2022

ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் அறிகுறிகள் Herpes Simplex Virus Symptoms deta...





ஹெர்பிஸ் (அக்கி)

பாலுறுப்பில் ஏற்படும் அக்கி (ஜெனிடல் ஹெர்பிஸ் – Genital Herpes).

ஜெனிடல் ஹெர்பிஸ் என்பது, ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்கள் டைப்-1 (Herpes Simples Virus – HSV-1எச்.எஸ்.வி-1) மற்றும் டைப்-2 (Herpes Simples Virus – HSV-2, எச்.எஸ்.வி-2) எனப்படும் வைரஸ் நோய் கிருமிகளால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும்.

 

ஜெனிடல் ஹெர்பிஸ் - Genital Herpes எப்படி வருகிறது

எச்.எஸ்.வி-2 நோய்தொற்று உள்ள நபருடன் பாலுறவு வைத்துக்கொள்வதால் இந்நோய் ஏற்படுகிறது. இந்நோயின் அறிகுறியாக தொந்தரவும்,எந்த புண்ணும் இல்லாமல் இருந்து, தனக்கு இந்நோயுள்ளது என்பதை அறியாமல் இருக்கும் பெண் அல்லது ஆணிடமிருந்து, இந்நோய் இவர்களுடன் பாலுறவு கொள்பவர்களுக்கு பரவுகிறது.

 

ஜெனிடல் ஹெர்பிஸ்-ன் அறிகுறிகள்.- Genital Herpes Symptoms

  • எச்.எஸ்.வி 2 நோய்தொற்று உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கு இவ்வகை நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்ற அறிகுறியின்றி இருக்கிறார்கள்.
  • இவ்வைரஸ் நோய்கிருமியின் தொற்று ஏற்பட்ட 2 வாரங்களுக்குள், இந்நோயின் அறிகுறிகள் முதலில் ஏற்படும்.
  • எச்.எஸ்.வி 2 நோயினால் ஏற்படும் புண்கள் 2 முதல் 4 வாரங்களுக்குள் சுகமாகி விடும். நோயின் அறிகுறிகள் இல்லாதிருந்தாலும், அவை பாலுறுப்புகளின் மேலோ அல்லது அவற்றை சுற்றியோ அல்லது குதத்தை சுற்றியோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொப்புளங்களாக தோன்றும்.
  • இந்த கொப்புளங்கள் உடைந்து புண்களை ஏற்படுத்தும். இப்புண்கள் முதல்முறை ஏற்படும்போது 2 முதல் 4 வாரங்களில் ஆறிவிடும்.
  • இந்த நோய் முதல் முறை ஏற்பட்ட பின், வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்து, முன்போலவே கொப்புளங்கள் ஏற்படும். ஆனால், இது பெரும்பாலும் குறைந்த பாதிப்புண்டாக்கும் மற்றும் முதல் முறையைவிட சில நாட்களே இருக்கும்.
  • இந்த நோய்தொற்று நீண்ட வருடங்களுக்கு உடலில் தங்கியிருக்கும். இந்நோய் ஏற்படும் எண்ணிக்கை ஒரு ஆண்டுக்குள் குறைந்து விடும்.

 

ஹெர்பிஸ் ஏற்படுவதை தடுப்பது எப்படி Genital Herpes Prevention.

ஜெனிடல் ஹெர்பிஸ் முதலிய அனைத்து பால்வினை நோயும் ஏற்படாமல் தவிர்க்க, தகாத நபர்களிடம் பாலுறவு கொள்ளாமலிருப்பதே சரியான வழியாகும்.

 

ஹெர்பிஸ் சிகிச்சை Herpes Treatment

ஹெர்பிஸை குணப்படுத்த நவீன மருத்துவத்தில் சிகிச்சை கிடையாது. ஆனால் வைரஸை எதிர்க்கும் மருந்துகளை உட்கொள்ளும்போது, இந்நோயின் தாக்கத்தை குறைக்கிறது மற்றும் வருவதை தடுத்துக்காக்கிறது. ஆனால் நாட்பட இந்த மருந்துகளை சாப்பிடும்போது பக்கவிளைவுகளும், பின்விளைவுகளும் ஏற்படும்.

 

ஹெர்பிஸ் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை - Genital Herpes Homeopathy Treatment

நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதோடு, ஹெர்பிஸ் நோயின் வீரியமிக்க தாக்குதலிளிருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கிறது.  ஹோமியோபதியில் ஹெர்பிஸ் நோய்க்கு  சிகிச்சை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் பெறலாம்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க

விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830

பண்ருட்டி:- 9443054168 


Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்